கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது பல்வேறு நாடுகளிலும் கரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையாளர்களின்றி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஹெட்மயர் முடிவை ஏற்கிறேன்: மைக்கில் ஹோல்டிங் - இங்கிலாந்து
லண்டன்: இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து அதிரடி பேட்ஸ்மேன் ஹெட்மயர், பிராவோ உள்ளிட்டோர் கரோனா வைரஸ் காரணமாக விலகிய முடிவை ஏற்கிறோம் என வெஸ்ட் அணியின் மைக்கில் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ஜூலை 8ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து ஹெட்மயர், கீமோ பவுல், பிராவோ ஆகியோர் விலகியுள்ளனர்.
இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் மைக்கில் ஹோல்டிங் பேசுகையில், ''ஹெட்மயர், பிராவோ, கீமோ ஆகியோர் தொடரிலிருந்து விலகியுள்ளது அணியின் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. கரோனா வைரஸ் காரணமாக தொடரிலிருந்து விலகியதை நான் ஏற்கிறேன். அவர்களை சுற்றுப்பயணம் வர வேண்டும் என என்னால் நிர்பந்திக்க முடியாது'' என்றார்.