நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியின் இரண்டாம் நாளான இன்று தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிவரும் நியூசிலாந்து அணியில், கேப்டன் வில்லியம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார்.
இதைத்தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான விவிஎஸ் லக்ஷ்மண் தனது ட்விட்டர் பக்கத்தில், வில்லியம்சனைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
இது குறித்த அவர் தனது ட்வீட்டில், "கேன் வில்லியம்சனின் திறனைக் கண்டு ஆச்சரியப்படுவதற்கில்லை. எந்தவொரு போட்டிக்கும் முழு கவனத்துடன் செயல்படுவது, அவரது வெற்றிக்கு காரணமாகும். அவர் இளைஞர்களுக்கான ஒரு உண்மையான உதாரணம்" என்று பதிவிட்டுள்ளார்.