தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#ICCTestChampionshipStandings: டாப்பில் இருக்கும் இந்தியா; கணக்கைத் தொடங்கும் தென் ஆப்பிரிக்கா - இந்தியா - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

India

By

Published : Oct 2, 2019, 11:54 AM IST

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மேம்படுத்தும் வகையில், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியது. அந்தவகையில், டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதல் ஒன்பது இடங்களில் இருக்கும் அணிகள் தலா ஆறு டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடுவார்கள்.

புள்ளிகள் வழங்கும் முறை

ஆக, மொத்தம் 27 தொடர்கள் 2019 முதல் 2021 வரை இரண்டு ஆண்டுகளுக்கு இந்தத் தொடர் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு தொடருக்கும் மொத்தம் 120 புள்ளிகள் வழங்கப்படும். அந்தத் தொடரில் மொத்தம் எத்தனை போட்டிகள் உள்ளதோ அதற்கு ஏற்றார் புள்ளிகள் பிரிக்கப்பட்டு அணிகளுக்கு வழங்கப்படும். இதனடிப்படையில் தரவரிசைப் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இந்தியா

இந்நிலையில், இந்திய அணி ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. அதேபோல, இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் முடிந்தது.

ஆஸ்திரேலியா

இதனிடையே, இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரும் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதனால், இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

தற்போது, இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று விசாகாப்பட்டினத்தில் நடைபெற்றுவருகிறது. இதன்மூலம், தென் ஆப்பிரிக்கா ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தனது முதல் போட்டியில் விளையாடுகிறது.

இதனால், அந்த அணி வெற்றியுடன் தனது கணக்கைத் தொடங்குமா அல்லது இந்திய அணி தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியல்:

எண் அணிகளின் நிலை விளையாடிய போட்டிகள் வெற்றி தோல்வி டிரா புள்ளிகள்
1. இந்தியா 2 2 0 0 120
2. நியூசிலாந்து 2 1 1 0 60
3. இலங்கை 2 1 1 0 60
4. ஆஸ்திரேலியா 5 2 2 1 56
5. இங்கிலாந்து5 5 2 2 1 56
6. வெஸ்ட் இண்டீஸ் 2 0 2 0 0
7. தென் ஆப்பிரிக்கா 0 0 0 0 0
8. பாகிஸ்தான் 0 0 0 0 0
9. வங்கதேசம் 0 0 0 0 0

ABOUT THE AUTHOR

...view details