2019 ஆம் ஆண்டு கிரிக்கெட்டை பொறுத்தவரையில், பல்வேறு சாதனைகளும், சர்ச்சைகளும் அரேங்கேறியிருந்தன. குறிப்பாக, கடந்த ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அஸ்வின் மான்கட் முறையில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் பட்லரை அவுட் செய்தது பெரும் சர்ச்சையானது.
கிரிக்கெட் விதிமுறைப்படியே அஸ்வின் மான்கட் முறையில் அவுட் செய்திருந்தாலும் அவரது நடவடிக்கையை பலரும் விமர்சத்தினர். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் அவர் டெல்லி அணிக்காக விளையாடவுள்ளார்.
இந்நிலையில், ரசிகர் ஒருவர் அஸ்வினிடம் ட்விட்டரில் நீங்கள் நடைபெறவுள்ள ஐபிஎல் சீசனில், யாரை மான்கட் முறையில் அவுட் செய்வீர்கள் என கேள்வி கேட்டார். அதற்கு அஸ்வின், க்ரீஸை விட்டு யார் வெளியே சென்றாலும் அவர்களை நிச்சயம் மான்கட் முறையில் அவுட் செய்வேன் என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்தார்.