தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தனது ஓய்வு குறித்து மனம்திறந்த முகமது ஹபீஸ்! - தமிழ் விளையாட்டு செய்திகள்

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான முகமது ஹபீஸ், வரவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்காக காத்திருப்பதாகவும், அதற்கு முன்பாக தனது ஓய்வை அறிவிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

will-be-available-even-if-t20-world-cup-is-postponed-says-mohd-hafeez
will-be-available-even-if-t20-world-cup-is-postponed-says-mohd-hafeez

By

Published : Jun 16, 2020, 7:00 PM IST

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக வலம்வந்தவர் முகமது ஹபீஸ். இவர் நேற்றுபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்காக காத்திருப்பதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஹபீஸ், “டி20 உலகக் கோப்பைக்கு தொடருக்கு பிறகே நான் எனது ஓய்வு ஓய்வு குறித்து திட்டமிட்டுள்ளேன். அத்தொடர் வராக நான் அணியில் இருக்க தேவையான முழு உடற்தகுதியில் இருக்கிறேன். மேலும் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறும் வரை நான் காத்திருப்பேன். ஏனெனில் பாகிஸ்தான் அணிக்காக ஒரு உலகக்கோப்பையை வென்ற பிறகே நான் ஓய்வு பெறுவேண்டும் என்பது எனது கனவு” என்று தெரிவித்தார்.

அதன் பின் முன்னாள் கேப்டன் ராஜாவின் கருத்துகளைப் பற்றி கேட்டபோது, ​​ஹபீஸ், "அவர் தனது கருத்துக்கு தகுதியானவர். ஆனால் மற்றவர்கள் சொல்வதன் அடிப்படையில் நான் கிரிக்கெட் விளையாடுவதில்லை. மற்றவர்கள் சொல்வதன் அடிப்படையில் நான் கிரிக்கெட்டை விட்டு வெளியேற மாட்டேன். நான் பாகிஸ்தான் அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என நம்புகிறேன். ஏனெனில் எனது தொழில் மற்றும் விருப்பமும் அதுதான் " என்று கூறினார்.

பின்னர் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்துவதற்கு ஐ.சி.சி விதித்த தடை குறித்து வினா எழுப்பிய போது, ஹபீஸ், கிரிக்கெட் மீண்டும் தொடங்கும் வரை இந்த "சிறிய" மாற்றங்கள் தற்காலிகமானவை என்றும் அவற்றை சரிசெய்ய முடியும் என்றும் கூறினார்.

2003 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிவரும் முகமது ஹபீஸ், இதுவரை 300கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்று, 12ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட ரன்களையும், 200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details