தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

யார் சிறந்த ஆல்-ரவுண்டர்... ஹர்திக் (அ) பென் ஸ்டோக்ஸ்? பதிலளிக்கும் பிராட் ஹாக்! - Brad Hogg in Twitter

சர்வதேச கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா அல்லது பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரில் யார் சிறந்த ஆல் ரவுண்டர் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் பதிலளித்துள்ளார்.

who-is-better-hardik-or-stokes-brad-hogg-answers
who-is-better-hardik-or-stokes-brad-hogg-answers

By

Published : Mar 24, 2020, 2:44 PM IST

சமூக வலைதளமான ட்விட்டரில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அதில், சர்வதேச கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா, பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரில் சிறந்த ஆல் ரவுண்டர் யார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, நான் இங்கிலாந்து வீரரான பென் ஸ்டோக்ஸை தேர்வு செய்வேன். ஹர்திக் மிகவும் திறமையான வீரர். ஆனால் இதுவரை அவர் போதுமான கிரிக்கெட் போட்டிகளில் ஆடவில்லை. ஆனால் மறுபக்கம் ஸ்டோக்ஸ் பல மேட்ச் வின்னிங் ஆட்டங்களை ஆடியுள்ளார் எனப் பதிலளித்தார்.

அதேபோல் யார் சிறந்த ஃபினிஷர் என்ற கேள்விக்கு, தோனி மற்றும் பெவன் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார்.

மேலும் பாகிஸ்தானின் பாபர் அஸாம், ராகுல் ஆகியோரில் யார் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ராகுல் பல்வேறு பேட்டிங் வரிசைகளில் களமிறங்கி, கீப்பிங் திறமையுடன் இந்திய அணியில் தன்னை நிலை நிறுத்தியுள்ளார். ஆனால் பாபர் அஸாம் பாகிஸ்தான் அணியின் முக்கிய பேட்ஸ்மேன். அதுவும் நீண்ட காலமாக பாகிஸ்தான் கிரிக்கெட்டை தாங்கிவருகிறார் என பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க:தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் ஒப்பந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட நட்சத்திர வீரர்!

ABOUT THE AUTHOR

...view details