கரோனா வைரஸ் காரணமாக விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாட்டு வீரர்கள் சமூகவலைதளங்களில் ரசிகர்களுடன் பேசுவது, நேர்காணலில் பங்கேற்பது என நாஸ்டால்ஜியா சம்பவங்களை கூறிவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நேர்காணலில் இந்திய வீரர் பார்த்தீவ் படேல் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹெய்டன் தன்னை மிரட்டிய சம்பவம் பற்றி பேசியுள்ளார்.
அதில், ''2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி ஆடியது. பிரிஸ்பேனில் நடந்த ஒரு போட்டியில் ஹெய்டன் சதம் விளாசி சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் இர்ஃபான் பதான் அவரது விக்கெட்டை வீழ்த்தியதும், நான் அவரது அருகில் சென்று ஸ்லெட்ஜிங் செய்தேன்.