தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'நான் எது செய்தாலும் சிறப்பாகவே செய்வேன்' - பகலிரவு டெஸ்ட் குறித்து  பிரேத்யேக பேட்டி! - பிங்க் நிற பந்து டெஸ்ட் போட்டி

பகலிரவு டெஸ்ட் போட்டி குறித்து பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கங்குலி ஈடிவி பாரத்திற்கு பிரேத்யேக பேட்டியளித்துள்ளார்.

Ganguly

By

Published : Nov 18, 2019, 3:17 AM IST

Updated : Nov 18, 2019, 7:24 AM IST

டெஸ்ட் போட்டியை மேம்படுத்தும் விதத்தில், டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக நடத்த ஐசிசி 2012ஆம் ஆண்டிலேயே சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து, 2015இல் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்றது. அதன்பிறகு, மற்ற அணிகளும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட ஆர்வம் காட்டிவந்தாலும், பிசிசிஐ மட்டும் இதற்கு மறுப்பு தெரிவித்துவந்தது.

பிசிசிஐயின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கடந்த மாதம் அக்டோபர் 23ஆம் தேதி பதவியேற்றப் பிறகு, இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறும் என அறிவித்தார். இதன் மூலம், இவ்விரு அணிகள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளன. இதற்கு முழுக்க முழுக்க கங்குலிதான் காரணம்.

தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இந்தூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இப்போட்டிக்கான பிட்ச் தயார் செய்துவிட்டாத மைதானத்தின் பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறுவது குறித்து பிசிசிஐயின் தலைவரான கங்குலி ஈடன் கார்டன் மைதானத்திலிருந்து நமது ஈடிவி பாரத்திற்கு பிரேத்யேக பேட்டியளித்துள்ளார். அதில் கேட்கப்ட்ட கேள்விகளும், பதில்களும் பின்வறுமாறு...

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணிக் குறித்து உங்களது பார்வை?

பதில்: கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. ஆனாலும், உலகக்கோப்பை போன்ற தொடர்களில் வெற்றி அடைய அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மயங்க் அகர்வால் குறித்து உங்களது கருத்து ?

பதில்: சூப்பராக விளையாடிவருகிறார். அவர் நல்ல திறமையான வீரர். இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கிய தனது ஆரம்பக் கட்டத்திலேயே அருமையாக விளையாடுகிறார்.

நீங்கள் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தபோது, இந்தியா - பாகிஸ்தான் போட்டி, டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி ஆகியவை கொல்கத்தாவில் நடைபெற்றது. இதுபோன்று ஏராளமான விஷயங்களை செய்துள்ளீர்கள். இதில் எந்த விஷயத்திற்கு நீங்கள் முன்னுரிமை தருவீர்கள்?

பதில்:அனைத்தையும் நான் சமமாக தான் பார்க்கிறேன். ஆனால், இப்போதைக்கு பகலிரவு டெஸ்ட் போட்டியை வெற்றிகரமாக நடத்துவதுதான் சவால் நிறைந்த செயலாக பார்க்கிறேன்.

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது நினைத்து உங்களது கருத்து?

பதில்: நிச்சயம் இப்போட்டியைக் காண மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். இப்போட்டியைக் காண மைதானம் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கிறேன்.

இதற்கு நீங்கள்தான் காரணம் என அனைவரும் சொல்கிறார்கள். அதைப் பற்றி உங்களது கருத்து ?

பதில்:நான் எது செய்தாலும், அதை சிறப்பாக செய்வேன். இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள் மூன்றே நாட்களில் விற்கப்பட்டது என்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. அதுவே சிறந்த விஷயமாகும்.

உள்ளூர் ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன அதைப் பற்றி உங்களது பதில் என்ன?

பதில்:அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையானால், பிறகு எப்படி டிக்கெட் கிடைக்கும். இருக்கைகளின் எண்ணிக்கை கொண்டே டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.

இந்திய அணியின் கேப்டனிலிருந்து தற்போது பிசிசிஐ தலைவராக இருக்கிறீர்கள். அடுத்த என்ன ?

பதில்: இதற்கு அடுத்த என்ன என்பது எனக்கு தெரியாது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என ஜாலியாக தனது பேட்டியை முடித்துக்கொண்டார் தாதா.

கங்குலி

ஈடன் கார்டன் கொல்க்த்தா மைதானத்தில், 1987 உலகக்கோப்பை ஃபைனல், 2001 இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி, 2016ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை ஃபைனல் போன்று பல மறக்க முடியாத போட்டிகள் நடைபெறுள்ளன. தற்போது அந்த வரிசையில், இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டியும் இடம்பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இவ்விரு அணிகளுக்கு இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிப்பரப்பாகிறது.

Last Updated : Nov 18, 2019, 7:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details