இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிவம் தூபே, ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிவம் தூபே 54 ரன்களை எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணித் தரப்பில் ஹெய்டன் வால்ஷ் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்கவீரரகள் சிம்மன்ஸ், லிவிஸ் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் விக்கெட்டிற்கு 73 ரன்களைச் சேர்த்தது.