உலகக்கோப்பை தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இதற்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போதுநடைபெற்றுவருகிறது. நேற்று ப்ரிஸ்டோல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தும், மேற்கிந்திய தீவுகளும் மோதின.
வெற்றி வாகை சூடியது மேற்கிந்திய தீவுகள் அணி! - warmup match
ப்ரிஸ்டோஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 91 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றிபெற்றது.
![வெற்றி வாகை சூடியது மேற்கிந்திய தீவுகள் அணி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3411703-thumbnail-3x2-uihfuih.jpg)
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி நியூசிலாந்தின் பந்துவீச்சை ஆடுகளத்தின் நான்கு திசைகளிலும் பறக்கவிட்டு சிதறடித்தது. இறுதியாக மேற்கிந்திய தீவுகள் அணி 49.9 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 421 ரன்கள் எடுத்தது.
பின்னர் 421 என்ற கடினமான இழக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 47.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 330 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.