தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மீண்டும் உயிர் பெரும் கிரிக்கெட்!

செயின்ட் ஜான்ஸ் (ஆன்டிகுவா) : ஜூலை எட்டாம் தேதி தொடங்கவுள்ள இங்கிலாந்திற்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க மேற்கிந்திய தீவுகள் அணி,  இங்கிலாந்து சென்றுள்ளது.

மீண்டும் உயிர் பெரும் கிரிக்கெட்!
மீண்டும் உயிர் பெரும் கிரிக்கெட்!

By

Published : Jun 9, 2020, 8:43 PM IST

கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே சர்வதேச அளவில் நடைபெறவிருந்த அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், அடுத்த மாதம் எட்டாம் தேதி தொடங்கவுள்ள இங்கிலாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க, மேற்கிந்தியத் தீவுகள் அணி, இங்கிலாந்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

மீண்டும் உயிர் பெரும் கிரிக்கெட்!

இது தொடர்பாக மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்றுள்ள வீரர்கள், அணி நிர்வாகிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், யாருக்கும் கரோனா தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்த பிறகே, அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

குழுவினர் மான்செஸ்டர் சென்றடைந்ததும், அங்கு அவர்களுக்கு மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்” என்றும் தெரிவித்துள்ளது.

இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனிலும் (ஜூலை எட்டாம் தேதி முதல் 12ஆம் தேதி வரை), இரண்டாவது, மூன்றாவது போட்டிகள் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டிலும் (ஜூலை 16 - 20) (ஜூலை 24 - 28) நடைபெறவுள்ளன.

விமானத்தில் செல்லும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள்

மேற்கிந்தியத் தீவுகள் அணி : ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட், நக்ருமா பொன்னர், கிரெய்க் பிராத்வைட், ஷமர் ப்ரூக்ஸ், ஜான் காம்ப்பெல், ரோஸ்டன் சேஸ், ரஹ்கீம் கார்ன்வால், ஷேன் டோவ்ரிச், செமர் ஹோல்டர், ஷாய் ஹோப், அல்சாரி ஜோசப், ரேமான் ரீஃபர், கெமர் ரோச்.

ABOUT THE AUTHOR

...view details