இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்தார். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டும் பங்கேற்ற ஆர்ச்சர், அதன் பின் பயிற்சியின் போது வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். எனினும் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 எனக் கைப்பற்றி அசத்தியது.
இதனிடையே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், முழங்கையில் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஏற்பட்டுள்ள முறிவு காரணமாக அவர் அடுத்ததாக நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடர், ஐபிஎல் ஆகிய தொடர்களில் பங்கேற்க மாட்டார் என இன்று அறிவித்தது.
ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு சீசன்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஜோஃப்ரா ஆர்ச்சர் அந்த அணியின் முன்னணி பந்துவீச்சாளராக உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 21 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இதுவை 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் அவர் களமிறங்க முடியாததால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழந்துள்ளனர்.