வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவந்த வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவந்தது. இதில் பிப்ரவரி 14ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, டாக்காவில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 409 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டா சில்வா 92 ரன்களை எடுத்தார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேச அணி 296 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ராகீம் கார்ன்வால் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி, பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார்.
பின்னர் 113 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இஸ்லாம், நயீம் ஆகியோரது அபார பந்துவீச்சால் 117 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேச அணி தரப்பில் இஸ்லாம் 4 விக்கெட்டுகளையும், நயீம் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.