பிசிசிஐயின் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு, இன்று கொல்கத்தாவில் உள்ள வீட்டில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை சீராகவுள்ளதாகவும், அவரது உடல்நிலையைத் தொடர்ந்து 24 மணி நேரம் கண்காணிக்கவுள்ளதாகவும் மருத்துவமனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கங்குலியின் உடல்நிலை குறித்து அறிய மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
அதன்பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மம்தா பானர்ஜி, “சவுரவ் கங்குலி தற்போது நலமுடன் இருக்கிறர். அவர் என்னிடம்கூட பேசினார். கங்குலிக்குச் சிறப்பான சிகிச்சியளித்துவரும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும், மருத்துவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:கரோனா விதிகளை மீறிய வீரர்களைத் தனிமைப்படுத்தியது பிசிசிஐ!