இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது இந்திய வேகப்பந்துவீச்சளர் முகமது சிராஜை, சிட்னி மைதானத்திலிருந்த ரசிகர்கள் இனரீதியாக விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது.
இச்சம்பவத்திற்கு இந்தியாவிடம் மன்னிப்புக் கோருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டது. மேலும், இதுகுறித்து நியூ சௌத் வேல்ஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காணப்பட்டு, அவர்களை நியூ சௌத் வேல்ஸின் எந்த கிரிக்கெட் மைதானத்திற்கு செல்ல முடியாதபடி வாழ்நாள் தடை விதிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சிட்னி இனவெறி சர்ச்சையில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை வழங்கவேண்டுமென இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.