இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் இந்திய அணி 483 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. வெற்றியை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.
இந்நிலையில், சென்னை மைதானம் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காகத் தயார்செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்திய அணி வீரர்கள் இப்போட்டியில் வெற்றிபெறும் தருணத்தை எட்டியுள்ளனர் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார். இவரது கருத்து சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியது.
இதையடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய அக்சர் பட்டேல், "சென்னை மைதானத்தின் பிட்ச் மாற்றியமைக்கப்பட்டது என்பது பற்றி பேசுகிறீர்கள் என்றால், எந்தப் பந்தும் தலைக்கவசத்தில் பட்டதாக எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் சாதாரணமாகவே சென்னை மைதானம் சுழற்பந்துக்குச் சாதகமான மைதானம். அதனைத் தவிர ‘பிட்ச்’ பற்றி எனக்கு எந்தவிதமான கருத்தும் இல்லை.