தமிழ்நாடு

tamil nadu

'அப்பாவி உயிரினங்களை நாம் சிறப்பாக வழி நடத்தவேண்டும்' - ரஹானே உருக்கம்!

By

Published : Jun 5, 2020, 5:35 AM IST

கேரளாவில் கர்ப்பிணி யானை உயிரிழந்தது குறித்து இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் அஜிங்கிய ரஹானே, 'நாம் அப்பாவி உயிரினங்களை எவ்வாறு சிறப்பாக வழி நடத்தவேண்டும் என்பது பற்றி சிந்திக்க வேண்டும்' என உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.

We need to treat our innocent creatures a lot better: Ajinkya Rahane
We need to treat our innocent creatures a lot better: Ajinkya Rahane

கேரள மாநிலம், பாலக்காடுப் பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு, அன்னாசிப் பழத்தில் வெடிமருந்துகள் வைத்து சாப்பிடக் கொடுத்ததில் யானை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் யானையின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் அஜிங்கியா ரஹானே தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த அப்பாவி உயிரினங்களை நாம் நடத்தும் விதம் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும். இந்த கொடூரமான செயலுக்கு உண்மையிலேயே நான் மிகவும் வெட்கப்படுகிறேன். இந்நிகழ்வு விலங்குகளிடம் கருணை காட்டுவதன் முக்கியத்துவத்தை எல்லோருக்கும் உணர்த்தும் என்று நம்புகிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் செத்ரி, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ஆகியோர் இச்சம்பவத்திற்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details