இந்திய கிரிக்கெட் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஷிகர் தவான் சமீபத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றார். அவர் அந்தத் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி 91 ரன்களைக் குவித்தார். அதன்பின் இந்திய அணியின் டெஸ்ட் தொடரில் இடம்பெறாமல் இருந்தார்.
இதனிடையே ஷிகர் தவானின் இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து ஷிகர் தவான் மருத்துவமனை ஊழியர்களுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில் அவர், ‘கிரிக்கெட் வீரர்கள் வீழ்வோம் ஆனால் மீண்டும் எழுவோம். காயம் ஆறிய பின் அதிலிருந்து மீள்வோம். எந்த மாதிரியான சூழ்நிலைகள் வந்தாலும் நீங்கள் எப்படி அதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதை பொறுத்தே அனைத்தும் உள்ளது.