தமிழ்நாடு

tamil nadu

நிர்வாகப் பிழையால் சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு 18 லட்சம் அபராதம்!

வுமன்ஸ் பிக் பேஷ் லீக் தொடரின் போது சிட்னி சிக்சர்ஸ் அணி செய்த நிர்வாகப் பிழையின் காரணமாக அந்த அணிக்கு ரூ.18 (தோராயமாக) லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

By

Published : Nov 22, 2020, 3:48 PM IST

Published : Nov 22, 2020, 3:48 PM IST

WBBL: Sydney Sixers fined $25000 for 'administrative error'
WBBL: Sydney Sixers fined $25000 for 'administrative error'

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் மகளிர் டி20 தொடரான வுமன்ஸ் பிக் பேஷ் லீக்கின் ஆறாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 55ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மெல்போர்ன் அணிக்கு லிசெல் லீ அதிரடியாக விளையாடி வெற்றியைத் தேடித்தந்தார்.

இப்போட்டிக்கு முன்னதாக சிட்னி சிக்சர்ஸ் அணி, போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டது. அதில் வேகப்பந்துவீச்சாளர் ஹேலி சில்வர் ஹோம்ஸ்-ன் போயர் அணியில் இடம்பெற்றிருந்தது.

ஆனால் போட்டியின் போது அவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்காமல், பெஞ்ச்சில் அமரவைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதா, அல்லது தவறுதலாக அவரது பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்ற விசாரணை நடைபெற்றது.

ஹேலி சில்வர் ஹோம்ஸ்

அப்போது, ஏற்கெனவே காயம் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த சில்வர் ஹோம்ஸ், அணியில் இடம்பெறுவதற்கான எந்த ஒரு கடிதத்தையும் வழங்காமல் இருந்துள்ளார். இதனால் அவரை பிளேயிங் லெவன் அணியில் சேர்க்க கூடாது. ஆனாலும் சிட்னி சிக்சர்ஸ் அணி தவறுதலாக அவரது பெயரை பிளேயிங் லெவன் அணியில் சேர்த்தது.

இதனையடுத்து தவறுதலாக அணியின் பிளேயிங் லெவன் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த சில்வர் ஹோம்ஸ், அப்போட்டியில் பந்துவீசவோ அல்லது பேட்டிங் செய்யவோ அனுமதிக்கப்படவில்லை.

மேலும் சிட்னி சிக்சர்ஸ் அணி செய்த நிர்வாகப் பிழையினால் அந்த அணிக்கு ரூ. 18 லட்சம் அபராதமும் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தவிட்டுள்ளது.

நடப்பு சீசன் வுமன்ஸ் பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சமூக வலைதளங்களில் வைரலாகும் விராட் கோலியின் உடற்பயிற்சி புகைப்படங்கள்!

ABOUT THE AUTHOR

...view details