தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தெருவோர கிரிக்கெட் வீரராக மாறிய கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான கோலி இந்தூரில் சிறுவர்களுடன் தெருவோர கிரிக்கெட் விளையாடிய காணொலி வைரலானது.

Virat play

By

Published : Nov 13, 2019, 9:03 AM IST

இந்தூர்:இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் கோலி, ஷூட்டிங்கின்போது சிறுவர்களுடன் தெருவோர (Gully) கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனான கோலி, கிரிக்கெட்டில் இடைவேளை கிடைக்கும்போது விளம்பரங்களில் நடித்துவருவார். வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஓய்வுபெற்றதால், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

இந்தத் தொடர் முடிந்ததையடுத்து தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி விளையாடவுள்ளார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட போட்டி நாளை இந்தூரில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், இந்தூரின் பிச்சோலி மர்தானாவில் நேற்று நடைபெற்ற விளம்பரப் படப்பிடிப்பின்போது இவர், சிறுவர்களுடன் தெருவில் (Gully) கிரிக்கெட் விளையாடிய காணொலி இணையதளத்தில் வெளியானது.

அந்தக் காணொலியில், முதலில் ஜாலியாக பேட்டிங் செய்தபின் சிறுவர்களிடம் பேட்டை வழங்காமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு தெருவோர கிரிக்கெட் வீரரைப் போலவே இவர் சிறுவர்களிடம் நடந்துகொண்டார்.

இதையும் படிங்க: 'சாமானிய வீரர் முதல் ரன் மிஷின் வரை' - கோலியின் சாதனைகள்!

ABOUT THE AUTHOR

...view details