இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியினர் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ளனர். இதன் முதல் போட்டி அஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் நடக்கவுள்ளது.
இதற்காக நேற்று இலங்கை அணியினர் இந்தியா வந்த நிலையில், இன்று இந்திய அணி போட்டியில் பங்கேற்க கவுகாத்தி வந்தடைந்தது. நாளை மறுநாள் நடைபெறும் முதல் போட்டிக்காக இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து அஸாம் மாநிலத்தில் தீவிரப் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், கிரிக்கெட் போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பேசுகையில், போராட்டங்கள் கட்டுக்குள் இருக்கின்றன. அதனால் போட்டி நடப்பதில் எவ்வித தடையும் இருக்காது என்றார்.
கவுகாத்தி வந்த இந்திய அணி இந்தத் தொடருக்காக இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேலும் காயம் காரணமாக நீண்ட நாள் ஓய்வில் இருந்த பும்ரா அணிக்கு திரும்பியுள்ளதால், அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதல் ரன்னுக்கு 39 பந்துகள் - ஸ்மித்துக்கு கரகோஷம் எழுப்பிய ரசிகர்கள்