வருகிற ஜனவரி மாதம் 10ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை இந்தியாவின் மாநிலங்களுக்கிடையேயான உள்ளூர் டி20 தொடரான சயீத் முஷ்டாக் அலி தொடரை நடத்த சமீபத்தில் பிசிசிஐ முடிவுசெய்தது. இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் மாநிலங்கள் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன.
இதில் கேரளா கிரிக்கெட் சங்கம் நேற்று (டிச.30) முஷ்டாக் அலி தொடருக்கான கேரள அணியை அறிவித்தது. இதில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் அணியின் கேப்டனாகவும், சச்சின் பேபி துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் அதேசமயம் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஏழு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டிருந்த, இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், தனது தடைக்காலம் முடிந்ததை அடுத்து சயீத் முஷ்டாக் அலி தொடருக்கான கேரள அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
கேரளா அணி : சஞ்சு சாம்சன் (கே), சச்சின் பேபி, ஸ்ரீசாந்த், பசில் தம்பி, ஜலஜ் சக்சேனா, ராபின் உத்தப்பா, விஷ்ணு வினோத், சல்மான் நஸிர், நித்தேஷ், கேஎம் ஆஸிப், அக்ஷய் சந்திரன், அபிஷேக் மோகன், வினூப் மனோகரன், முகமது அசாருதீன், ரோஹன் எஸ் குன்னும்மால், எஸ். மிதூன், அறிமுக வீரர்களாக கோவிந்த் சர்மா, ஸ்ரீரூப், மிதுன் பி.கே., ரோஜித் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் சென்ற கார் விபத்து!