தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இனி நோ ரன்னிங், ஒன்லி ஜம்பிங்தான்; சர் ஜடேஜாவின் சூப்பர் கேட்ச்! - இந்தியா - நியூசிலாந்து

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து வீரர் நைல் வாக்னர் அடித்த பந்தை இந்திய வீரர் ஜடேஜா ஒற்றை கையில் பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

By

Published : Mar 1, 2020, 4:24 PM IST

நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் (இரண்டாவது) போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றுவருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 242 ரன்களும், நியூசிலாந்து அணி 235 ரன்களும் எடுத்தன. இதனால், ஏழு ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிவரும் இந்திய அணி, இன்று இரண்டாம் ஆட்டநாள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 90 ரன்களை எடுத்துள்ளது.

இதனிடையே, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் எட்டு விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து ரன்குவிப்பில் தடுமாறிய போது, ஒன்பதாவது விக்கெட்டாக சேர்ந்த கைல் ஜேமிசன் - நைல் வாக்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவர்களது பார்ட்டனர்ஷிப்பை பிரிக்க முடியாமல் தவித்த இந்திய அணிக்கு முகமது ஷமி பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

அவர் வீசிய 72ஆவது ஓவரின் கடைசி பந்தினை, நைல் வாக்னர் ஸ்கோயர் லெக் திசையில் புல் ஷாட் ஆடினார். அப்போது அந்த திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஜடேஜா வானில் மின்னல் வேகத்தில் வந்த பந்தை, எகிறி தனது ஒற்றைக் கையில் (இடது கை) லாவகமாக பிடித்து மிரட்டினார்.

ஃபீல்டிங்கிற்கு பெயர்போன ஜடேஜாவின் இந்த கேட்ச், இந்த ஆண்டின் சிறந்த கேட்ச்சாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜடேஜாவின் அற்புதமான கேட்ச்சால் நைல் வாக்னர் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

எதிரணி வீரர்கள் புருவத்தை உயர்த்தும் வகையில் அமைந்திருந்த ஜடேஜாவின் இந்த கேட்ச் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுபோன்ற ஃபீல்டிங் திறனிற்காகதான் இவர் (ஜடேஜா) சர் ஜடேஜா என அழைக்கப்படுகிறார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் புகழ்ந்துள்ளார்.

இதையும் படிங்க:எதிரணி ஃபீல்டிங்கை சரி செய்த தோனி

ABOUT THE AUTHOR

...view details