ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின்போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு, கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஜடேஜாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது கை பெருவிரலில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர். அத்துடன், அவர் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என அறிவுறுத்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரவீந்திரஜடேஜாவிற்கு ஓய்வளிக்கப்பட்டது. உடல்நலம் பெற்று மீண்டுவந்த ஜடேஜா, பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நேற்று மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளார்.