இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜன.15) பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இருநாட்டு அணிகளும் பிரிஸ்பேன் சென்று, பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன், பங்கேற்கும் பட்சத்தில் அது அவருக்கு 100ஆவது டெஸ்ட் போட்டியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.