நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று வெலிங்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணியின் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 பந்துகளில் 71 ரன்களை குவித்தார். போட்டியில், மேக்ஸ்வெல் அடித்த சிக்சர் ஒன்று மைதானத்திலிருந்த இருக்கையை உடைத்தது.