உலகக்கோப்பைத் தொடருக்கு பிறகு இந்திய அணியில் இருந்து விடுவித்துக்கொண்டு ஓய்வில் இருக்கும் தோனி, எப்போது மீண்டும் கிரிக்கெட் விளையாட்டிற்கு திரும்புவார் என்பதே ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
இதனிடையே தோனியின் மனைவி சாக்ஷி, அவ்வப்போது தோனி அவர் மகளுடன் விளையாடும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகிறார். அந்த வீடியோக்கள் தோனியின் ரசிகர்களால் அதிகமாக பகிரப்படும்.
பனிப்பொழிவில் மகளுடன் ஆட்டம்போடு தோனி அதில் இம்முறை, உத்தரகாண்ட்டில் உள்ள ஒர் இடத்தில் பெய்துவரும் பனிப்பொழிவில் தோனி தன் மகள் ஸிவாவுடன் சேட்டை செய்துள்ளார். பனியை எடுத்து தன் மகள் மீது வீசி விளையாடுகிறார். பதிலுக்கு ஸிவாவும் தோனி மீது பனியை அள்ளி வீசுகிறார். இந்த வீடியோ அவரது ரசிகர்களிடையே வழக்கம்போல் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ஐசிசி தரவரிசை: நம்பர் 1 கோலி... முன்னேறிய லபுசானே, ஸ்டோக்ஸ்