இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து சில போட்டிகளில் மட்டுமே விளையாடி, பின் நாட்களில் அடையாளம் தெரியாத வீரர்களாக மாறியவர்கள் சிலர். அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் மனோஜ் திவாரி. இந்திய அணிக்காக 2008இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் அறிமுகமான இவர் இதுவரை 12 ஒருநாள் போட்டிகளிலும், மூன்று சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
இந்திய அணியில் விளையாட போதுமான வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை என்றாலும் ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரையில் டெல்லி, கொல்கத்தா, புனே, பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக என மொத்தம் 98 போட்டிகளில் விளையாடி 1,695 ரன்களை எடுத்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் 20ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் 13ஆவது சீசனுக்கான ஏலத்தில் மனோஜ் திவாரியின் பெயர் இடம்பெற்றிருந்து. அவரது அடிப்படைத் தொகை ரூ. 50 லட்சம் என இருந்தபோதிலும் அவரை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை.