கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இம்மாதம் 15ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 தொடர் தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும், சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளருமான லட்சுமிபதி பாலாஜி, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் மறக்கமுடியாத போட்டிகள் குறித்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். இக்காணொலியை சிஎஸ்கே அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அக்காணொலி வாயிலாக பாலாஜி கூறுகையில், "2010ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக தோனி ஆடிய ஆட்டத்தை என்றும் என்னால் மறக்க இயலாது. அச்சமயத்தில் நாங்கள் வெற்றிபெற்றால் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவோம் என்ற சூழ்நிலை.