இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்காக இன்று அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தி சென்ற இந்திய அணி, மாலை நேரத்தில் பயிற்சியை மேற்கொண்டது.
அப்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ள நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, இந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டார். இந்த வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது. அதில் அவர், பவுலிங் பயிற்சியாளர் பரத் அருணுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.