தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

விக்கெட்டைத் தூக்க சரியாக கணித்த மேக்ஸ்வெல்! - மேக்ஸ்வேலின் கணிப்பு

பிக் பாஷ் லீக் தொடரில் ரெனிகேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது மேக்ஸ்வெலின் கணிப்புப் படியே மெல்போர்ன் ரெனிகேட்ஸ் வீரர் ஆட்டமிழந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Maxwell turns clairvoyant, predicts Harper's dismissal
Maxwell turns clairvoyant, predicts Harper's dismissal

By

Published : Jan 4, 2020, 11:07 PM IST

ஆஸ்திரேலியாவில் நடப்பு சீசனுக்கான பிக் பாஷ் டி20 தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று மெல்போர்னில் நடைபெற்ற இன்றைய லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்தியது.143 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வின் அதிரடியால் 18.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது.

இந்தத் தோல்வியின் மூலம், நடப்பு சாம்பியனான மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி இந்த சீசனில் தொடர்ந்து விளையாடிய ஆறு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனிடையே இப்போட்டியின் போது மேக்ஸ்வெலின் கணிப்பு சரியாக நடந்துள்ளது. ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் போது மேக்ஸ்வேல் தனது டி ஷர்ட் மைக்குடன் வர்ணனையாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது பேட்டிங் செய்த மெல்போர்ன் ரெனிகேட்ஸ் வீரர் ஹார்பர் மிட் ஆன் அல்லது மிட் விக்கெட்டில் கேட்ச் தருவார் என கூறினார். மேக்ஸ்வேல் கூறியபடி நாதன் குல்டர் நைல் வீசிய அடுத்தப் பந்திலேயே ஹார்பர் மிட் ஆன் ஃபீல்டர் வோரலிடம் (Worrall) கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெலின் கணிப்புப் படியே மெல்போர்ன் ரெனிகேட்ஸ் வீரர் ஆட்டமிழந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க:ஸ்டீவ் ஸ்மித்துக்கு முன் ஒரு ரன்னுக்கு ஸ்டான்டிங் ஒவேஷன் பெற்ற டிராவிட்!

ABOUT THE AUTHOR

...view details