இந்திய அணியின் முன்னாள் வீரரும், டெல்லி உள்ளூர் அணியின் முன்னாள் கேப்டனுமான கவுதம் கம்பீர், இன்று டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட பிரச்னையை தனது ட்விட்ட்ர் பதிவில் பதிவிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில், டிடிசிஏ(டெல்லி & மாநில கிரிக்கெட் சங்கம்) ஒரு மோசமான காரியத்தில் ஈடுபட்டுள்ளது. டிடிசிஏ-வைக் கலைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதில் சம்மந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும். அல்லது வாழ்நாள் தடை விதிக்கப்படவேண்டும் என பிசிசிஐ தலைவரான கங்குலியை இணைத்துக் குறிப்பிட்டுள்ளார்.