கோவிட்-19 பெருந்தொற்றால் இந்தியாவில் மூன்று கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பொதுமக்களை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தி மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் வீரர்கள் தங்களது குடும்பத்தினருடனும், சமூக வலைதளங்களிலும் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அவரது மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து, வீட்டு மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாடுவது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதற்கு முன்னதாக விராட் கோலி ஒரு பேட்டியின் போது, நானும் எனது மனைவி அனுஷ்காவும் திருமணம் ஆனவர்கள்தான். ஆனால் உண்மையை சொல்லவேண்டுமெனில் அவருடன் இவ்வளவு நாள் நேரத்தை செலவிடுவது இதுவே முதல் முறையாகும். ஏனெனில் இருவரும் வெவ்வேறு தொழிலைச் சார்ந்தவர்கள். அதனால் ஒருவருக்கு நேரம் கிடைத்தாலும், மற்றொருவருக்கு அச்சமயம் வேலை இருக்கும். ஆனால் தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக நாங்கள் இவ்வளவு நாட்களாக ஒன்றாக இணைந்து எங்களது நேரத்தை செலவிட்டு வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: மனைவிக்காக புல்லாங்குழல் இசைக் கலைஞராக மாறிய தவான்
!