உலகம் முழுவதும் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக மருத்துவர்கள், செவிலியர், காவல் துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் போராடிவருகின்றனர். இவர்கள் 'கரோனா வாரியர்ஸ்' எனச் சமூக வலைதளங்களில் அழைக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் பெங்களுரூ காவல் துறையினருக்கு ஐசிசி கிரிக்கெட் குழுத் தலைவர் அனில் கும்ப்ளே, சானிடைசர், சோப், முகமூடி, நோயெதிர்ப்புச் சக்தியை அதிகமாக்கும் மருந்துகள் கொண்ட ஆயிரம் பாதுகாப்பு உபகரணத் தொகுப்பை காவல் ஆணையர் பாஸ்கர் ராவிடம் வழங்கியுள்ளார்.
இதையடுத்து கும்ப்ளே பேசுகையில், ''கரோனா தீநுண்மி தொற்று அனைத்து இடங்களிலும் பரவிவருகிறது. கரோனாவால் சில காவல் துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.