பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கிய முதல் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்து ஏமாற்றமளித்தது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி முதல் மெல்போர்னில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, இப்போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது.
வாசிம் ஜாஃபர் ஹிடன் மெசேஜ்
இந்நிலையில் இரண்டாவது டெஸ்டிலிருந்து இந்திய அணியை வழிநடத்தவுள்ள அஜிங்கியா ரஹானேவுக்கு ட்விட்டர் மூலம் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் ஹிடன் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளாது.
வாசிம் ஜாஃபரின் ட்விட்டர் பதிவில், டியர் ரஹானே, உங்களுக்கு என்னுடைய ஹிடன் மெசேஜ். இதனை பயன்படுத்துங்கள், பாக்ஸிங் டே டெஸ்டில் உங்களுக்கு அதிர்ஷடம் காத்திருக்கு என பதிவிட்டு, அதனுடன் சில ஆங்கில சொற்களையும் இணைத்திருந்தார்.