தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் இயன் பெல் ஓய்வு! - இயன் பெல் ஓய்வு

அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் இங்கிலாந்து வீரர் இயன் பெல் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

warwickshire-and-former-england-batsman-ian-bell-announces-retirement
warwickshire-and-former-england-batsman-ian-bell-announces-retirement

By

Published : Sep 5, 2020, 10:15 PM IST

இங்கிலாந்து அணியின் மிகச்சிறந்த வீரராக வலம்வந்தவர் இயன் பெல். இங்கிலாந்து அணியில் கடந்த 2004ஆம் ஆண்டு அறிமுகமாகிய இவர், 118 டெஸ்ட், 116 ஒருநாள் போட்டிகள், எட்டு டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

கடைசியாக 2015ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடினார். அதன்பிறகு இங்கிலாந்து அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் இவர் 22 சதங்களையும், 46 அரைசதங்களையும் விளாசியுள்ளார்.

2015ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியில் செய்யப்பட்ட பல்வேறு மாற்றங்களில் பல புதிய வீரர்கள் வாய்ப்புகள் பெற்று நன்றாக விளையாடி வந்தனர். அதனால் இயன் பெல் இங்கிலாந்து அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டுக்கு பின் கவுண்டி கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வந்த இயன் பெல், வார்விக்ஹையர் அணிக்காக பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்தார். இதனால் இந்த ஆண்டு அந்த அணி இயன் பெல்லின் ஒப்பந்தத்தை ஒரு ஆண்டு நீட்டித்தது.

இந்நிலையில் இயன் பெல் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய ஓலி போப்பை சச்சின் டெண்டுல்கர் பாராட்டும்போது, ”ஓலி போப்பின் ஸ்டான்ஸ், ஃபூட்வொர்க் ஆகியவை இயன் பெல்லைப் போலவே உள்ளன” என்று கூறியிருந்தார்.

இந்திய அணிக்கு எதிராக இயன் பெல் பல மறக்க முடியாத ஆட்டங்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:யூஎஸ் ஓபன் : நான்காம் சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்!

ABOUT THE AUTHOR

...view details