தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#Ashes: ஸ்டீவ் ஸ்மித்தின் ஆட்டத்தை நிறுத்திவைத்த மழை! - ஆஸ்திரேலியா - இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல்நாள் ஆஸ்திரேலிய அணி 98 ரன்களை எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டுள்ளது.

Steve Smith

By

Published : Sep 4, 2019, 7:43 PM IST

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியாக நடத்தப்பட்டுவரும் ஆஷஸ் டெஸ்ட் தொடர், இம்முறை இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் மூன்று போட்டிகள் முடிந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியிலும், இங்கிலாந்து அணி மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது.

டாஸ்

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா, பெட்டின்சன் ஆகியோருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித், மிட்சல் ஸ்டார்க் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வார்னரின் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் பிராட்

இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரராக வார்னர், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் களமிறங்கினர். இந்தத் தொடரில் ஆறு இன்னிங்ஸில் 89 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபார்ம் அவுட்டில் இருந்த வார்னர் இன்றைய போட்டியிலும், பிராட் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து, மார்கஸ் ஹாரிஸும் பிராட் பந்துவீச்சில் 13 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர்.

பந்தை பவுண்ட்ரிக்கு அனுப்பிய ஸ்மித்

இதனால், ஆஸ்திரேலிய அணி ஏழு ஓவர்கள் முடிவில் 28 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. இந்த நிலையில், அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினார். மார்னஸ் லாபுக்ஸாக்னே - ஸ்டீவ் ஸ்மித் ஜோடி நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்து வருகிறது. காயம் காரணமாக மூன்றாவது போட்டியில் விளையாடாமல் இருந்த ஸ்டீவ் ஸ்மித் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கை தரும் வகையில் பேட்டிங் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மித் - மார்னஸ் லாபுக்ஸாக்னே ஜோடி

ஆஸ்திரேலிய அணி 26 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 98 ரன்களை எடுத்துள்ளபோது மழைக் குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மார்னஸ் லாபுக்ஸாக்னே 49 ரன்களுடனும், ஸ்மித் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதன்மூலம், இன்றைய போட்டியில், ஸ்டீவ் ஸ்மித் மட்டுமல்ல மழையும் ரிட்டன் ஆகியுள்ளது என நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details