தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

நேற்று பாகுபலி... இன்று தோர்... நாளை யார்? - வார்னர் அட்ராசிட்டி - தமிழ் விளையாட்டு செய்திக:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வார்னர், பிரபல அவெஞ்சர்ஸ் கதாநாயகர்களுள் ஒருவரான தோர் போன்று செய்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Warner becomes 'Thor' in latest TikTok video, says 'acting is horrible'
Warner becomes 'Thor' in latest TikTok video, says 'acting is horrible'

By

Published : May 21, 2020, 10:20 AM IST

Updated : May 21, 2020, 10:37 AM IST

கரோனா பெருந்தொற்றின் காரணமாக விளையாட்டு வீரர்கள் தங்களது நேரத்தைச் சமூக வலைதளங்களில் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் திரைத் துறையைச் சேர்ந்தவர்களைவிட மிகவும் பிரபலமாக வலம்வருபவர், ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர்.

இதுவரை கிரிக்கெட்டில் மட்டும் தனது அதிரடியைக் காட்டி வந்த வார்னர், கரோனா ஊரடங்கின் காரணமாக டிக்டாக்கிலும் தனது அசத்தல் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தனது மனைவி, குழந்தைகளுடன் அவர் வெளியிடும் காணொலி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகின்றன.

வார்னரின் இன்ஸ்டாகிராம் பதிவு

வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொலியில், பிரபல ஹாலிவுட் திரைப்படமான அவெஞ்சர்ஸ் படத்தின் முக்கியக் கதாநாயகர்களுள் ஒருவரான தோர் போன்று, தனது பேட்டை வைத்து செய்துள்ள காணொலி ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

இதற்கு முன்னதாக வார்னர், இந்தியா திரைப்படமான பாகுபலி படத்தின் வசனத்தை, அதேபோன்று உடை அணிந்து பேசிய டிக்டாக் காணொலி, மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆட்டநாயகன் வார்னர் - 'கிரிக்கெட்டில் மட்டுமல்ல டிக்டாக்கிலும்'

Last Updated : May 21, 2020, 10:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details