தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தெலுங்கிலிருந்து பஞ்சாபிக்கு மாறிய டேவிட் வார்னர் ஃபேமிலி! - Ipl hyderabad team

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் டிக் டாக்கில் குரு ரந்தவா பாடிய 'ஸ்லோலி ஸ்லோலி' என்ற பஞ்சாபி பாடலுக்கு ஆடிய காணொலி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுவருகிறது.

warner-and-family-now-dance-to-guru-randhawas-slowly-slowly-track
warner-and-family-now-dance-to-guru-randhawas-slowly-slowly-track

By

Published : May 19, 2020, 5:43 PM IST

லாக் டவுன் காலத்தில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பதோடு, ரசிகர்களையும் குஷிப்படுத்தி வருகிறார், ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர். இவர் மனைவி, குழந்தைகள் ஆகியோரோடு சேர்ந்து இந்தியப் பாடல்களுக்கு டான்ஸ் ஆடி, பதிவேற்றும் டிக்டாக் காணொலிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.

டேவிட் வார்னர் ஃபேமிலி

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக ஆடும் டேவிட் வார்னர், தெலுங்கு பாடல்களுக்குத் தொடர்ந்து குடும்பத்தினருடன் நடனம் ஆடி வந்தார். 'அலாவைகுந்தபுரமுலோ' படத்தின் புட்டபொம்மா, ராமுலோ ராமலா பாடலுக்கு ஆடியது; பாகுபலி வசனம் என தெலுங்கு படங்களில் பாடல்களுக்குத் தொடர்ந்து டிக்டாக் செய்து வந்தார்.

இன்று தெலுங்கு பாடல்களிலிருந்து பஞ்சாப் பாடலுக்கு மாறியுள்ளார். குரு ரந்தவா பாடிய 'ஸ்லோலி ஸ்லோலி' பாடலுக்கு ரேடியம் ட்ரெஸ் அணிந்து, வார்னர் தன் குடும்பத்தினருடன் ஆடும் டான்ஸ் ரசிகர்களிடையே ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

டேவிட் வார்னர் ஃபேமிலி

மேலும் ரசிகர்கள் வார்னரிடம் தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் பாடல்களுக்கு டிக்டாக் செய்யுமாறு பின்னூட்டமிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:'புட்ட பொம்மா' பாடலுக்கு வார்னரின் 'பொம்மலாட்டம்'

ABOUT THE AUTHOR

...view details