தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 23, 2020, 6:44 PM IST

ETV Bharat / sports

‘தந்தையின் கனவை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளேன்’ - முகமது சிராஜ் உருக்கம்!

மறைந்த தந்தையின் கனவை நிறைவேற்றும் படி, எனது தாய் கூறிய அறிவுரையை ஏற்க நான் கடைமைப்பட்டுள்ளேன் என இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

Want to fulfill my fathers dream of making India proud: Siraj
Want to fulfill my fathers dream of making India proud: Siraj

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ். 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக ஆடிய சிராஜ், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடந்த வாரம் சிராஜின் தந்தை முகமது கோஸ் நுரையீரல் பிரச்சினை காரணமாக உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க சிராஜிற்கு பிசிசிஐ உதவ முன்வந்தது. ஆனால் சிராஜ் அதனை ஏற்க மறுத்து, இந்திய அணியுடன் பயணிக்க முன்வந்தார்.

இதுகுறித்து பேசிய சிராஜ், ‘எனது வாழ்வின் முகப்பெரும் ஆதரவை நான் தற்போது இழந்துள்ளேன். இருப்பினும் என் தாய் என்னிடம், தந்தையின் கனவான இந்தியாவிற்காக விளையாடி பெருமை சேர்க்கவேண்டும் என்பதனை அறிவுறுத்தினார். அதனால்தான் எனது தந்தையின் இறுதிச்சடங்கிற்குக் கூட நான் செல்லாமல் அணியினருடன் இருந்தேன்.

எனது தந்தையின் கனவை நிறைவேற்ற நான் கடமைப்பட்டுள்ளேன். மேலும் இந்த இக்கட்டான சூழலின் தனது அணி வீரர்கள் எனக்கு ஒரு குடும்பத்தைப் போல ஆதரவளித்தனர். கேப்டன் கோலி, எனது தந்தையின் கனவை நிறைவேற்றுபடி உத்வேகமளித்தார்’ என்று உருக்கத்துடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:‘ஆஸி., அணிக்கெதிரான சவாலை எதிர்கொள்ள தயார்’ - பும்ரா

ABOUT THE AUTHOR

...view details