2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கப்படவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதவுள்ளன. இதில் சென்னை அணியின் கேப்டன் தோனி உலகக்கோப்பைத் தொடருக்கு பின் சர்வதேச போட்டிகளில் ஆடாமல் ஓய்வில் உள்ளார்.
தோனியின் நிலை குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி, அணியின் கேப்டன் விராட் கோலி, அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என யாரும் வாய் திறக்காமல் உள்ளனர். இதனிடையே ஐபிஎல் தொடரில் தோனி நிச்சயம் பங்கேற்பார் என சென்னை அணி தெரிவித்திருந்தது.
இதனால் ஐபிஎல் தொடரில் தோனியைப் பார்க்க தோனியின் ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இதற்கிடையே நேற்று ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியாகிய நிலையில், தொடருக்கு தயாராகும் விதமாக அந்தந்த அணி நிர்வாகங்கள் பயிற்சி முகாம்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.