தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கடினமான சூழலை எளிதாக கையாள்கிறார் ஹிட்மேன்: விவிஎஸ்...! - ரோஹித் பற்றி விவிஎஸ் லக்‌ஷ்மண்

கடினமான சூழல்நிலைகளை ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் ரோஹித் ஷர்மா எளிதாகக் கையாள்கிறார் என இந்திய பேட்டிங் ஜாம்பவான் விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

vvs-laxman-heaps-praise-on-rohit-sharma-for-his-ability-to-lead-under-pressure
vvs-laxman-heaps-praise-on-rohit-sharma-for-his-ability-to-lead-under-pressure

By

Published : May 29, 2020, 4:54 PM IST

இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் விவிஎஸ் லக்‌ஷமண். டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸ்களின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் லக்‌ஷ்மண், இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மாவை பாராட்டியுள்ளார்.

அதுகுறித்து லக்‌ஷ்மண் பேசுகையில், டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரின் முதல் சீசனிலேயே 404 ரன்கள் குவித்து சிறந்த வீரராக இருந்தார். அப்போது அவர் இந்திய அணிக்காக அறிமுகமாகி டி20 உலகக்கோப்பையில் ஆடியிருந்தார். டெக்கான் சார்ஜர்ஸ் அணி சிறப்பாக ஆடவில்லை என்றாலும், அவர் மிகச்சிறப்பாக ஆடினார். 13 போட்டிகளில் ஆடி 4 முறை அரைசதம் அடித்தார்.

ரோஹித் ஷர்மா

மும்பை அணிக்காக பெறும் ஒவ்வொரு வெற்றியின் போதும் அவருடைய மன உறுதி அதிகமாகியது. இளைஞர்களுக்கு உதவியாக சரியான கருத்துகளை கூறுவதிலும், சரியான நேரத்தில் முடிவுகளை எடுப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறார்.

கடினமான சூழல்களில் பேட்டிங் செய்வதோடு மட்டுமல்லாமல் கேப்டன்சியை எளிதாக கையாள்கிறார். அதனால்தான் அவரால் ஐபிஎல்லில் சிறந்த கேப்டனாக இருக்க முடிகிறது'' என்றார்.

இதையும் படிங்க:2011 உலகக்கோப்பை ஃபைனலில் தோனியால்தான் 2 முறை டாஸ் போடப்பட்டது - சங்ககரா

ABOUT THE AUTHOR

...view details