நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் இயன் ஸ்மித். இவர் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவி்யன் ரிச்சர்ட்ஸ் பற்றி ஐசிசி நேர்காணலில் பேசியுள்ளார். அதில், ''வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ். டி20 கிரிக்கெட்டை அவர் காலத்தில் ஆடியிருந்தால் அவர் பெரும் ஜாம்பவானாக இருந்திருப்பார்.
டி20 கிரிக்கெட்டின் லெஜண்டாக இருந்திருப்பார் விவியன் ரிச்சர்ட்ஸ்: இயன் ஸ்மித் - legend in T20 cricket
விவியன் ரிச்சர்ட்ஸ் டி20 கிரிக்கெட்டில் ஆடியிருந்தால் அந்த வகையான போட்டிகளின் லெஜண்டாக இருந்திருப்பார் என நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
பட் கம்மின்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு கொடுக்கப்பட்ட தொகைகளை விடவும் அதிக தொகைக்கு விவியன் ரிச்சர்ட்ஸை அணிகள் ஏலத்தில் எடுக்க முயற்சி செய்திருப்பார்கள். அனைத்து வகையான போட்டிகளுக்கு அவர் சரியாக இருப்பார். அவரது ஸ்ட்ரைக் ரேட்டைப் பார்த்தாலே அனைவரும் தெரிந்துகொள்ளலாம். உலகின் தலைசிறந்த வீரர்களைக் கொண்டு ஒரு அணியை உருவாக்கினால் அவரின் பெயர் தான் முதலில் இருக்கும்.
கிரிக்கெட் உலகில் அவர் அளவிற்கு எதிரணிகளின் மீது ஆதிக்கம் செலுத்திய வீரரை நான் பார்த்ததில்லை. ஹெல்மட் இல்லாமல் களம் புகும் ஸ்டைல், வெஸ்ட் இண்டீஸ் கேப், பேட்டை பிடிக்கும் விதம் என அனைத்தையும் ரசிக்கலாம்'' எனத் தெரிவித்துள்ளார்.