மூன்று அணிகள் ஒரே போட்டியில் விளையாடிய 3டிசி சாலிடரிட்டி கோப்பை போட்டி கடந்த வாரம் தென் ஆப்பரிக்காவில் நடைபெற்றது. புதுமையான முறையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியை உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர். தென் ஆப்பரிக்காவிலுள்ள சென்சூரியன் பார்க்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்தியாவிலிருந்து இர்பான் பதான், தீப்தாஸ் குப்தா, சஞ்சய் மஞ்சரேகர் உள்ளிட்டோர் அவர்களது வீட்டில் இருந்தவாறு வர்ணனை செய்தனர்.
கரோனா காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு விஷயங்கள் வழக்கமான நடைமுறையிலிருந்து விலகி புதுமையான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிரிக்கெட் வர்ணனையும் மைதானத்தில் இல்லாமல் வீட்டில் இருந்தவாறே செய்யும் புதுமையான முயற்சி இந்தப் போட்டியில் சோதனை முயற்சியாக நிகழ்த்தப்பட்டது.
வர்ணனை மட்டுமில்லாமல் சில தொழில்நுட்ப கலைஞர்களும் வீட்டிலிருந்தபடியே தங்களது பணிகளை செயல்படுத்தியுள்ளனர். இந்த முயற்சியானது நல்ல பலனை தந்திருப்பதால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதனை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் முக்கிய வர்ணனை மொழிகளான ஆங்கிலம், இந்தி தவிர்த்து பிராந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் இந்த முயற்சியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். வீட்டில் இருந்தவாறு வர்ணனை செய்த அனுபவம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் கூறியதாவது: