கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஊரடங்கின் காரணமாக நாட்டின் அனைத்து விதமான போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டு மாநில எல்லைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பிழைப்பிற்காக வெளிமாநிலம் சென்றிருந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள், போக்குவரத்து வசதியின்றி நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான வீரேந்திர சேவாக், ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்து வரும் குடிபெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் தனது வீட்டிலேயே உணவு தயாரித்து உதவி வருகிறார்.