தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

‘பெண்களே நம்மைவிட வலிமையானவர்கள்’ - விராட் கோலி - அனுஷ்கா சர்மா

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவி, குழந்தையின் புகைப்படத்துடன் உணர்ச்சிகரமான பதிவை வெளியிட்டுள்ளார்.

Virat wants daughter Vamika to be as 'fierce' and 'compassionate' as Anushka
Virat wants daughter Vamika to be as 'fierce' and 'compassionate' as Anushka

By

Published : Mar 8, 2021, 1:59 PM IST

சர்வதேச மகளிர் தினம், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண்மையைப் போற்றும் விதமாக மட்டுமில்லாமல், பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண்களின் சாதனையைக் கொண்டாடும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா, குழந்தை வாமிகாவின் புகைப்படத்தை இணைத்து உணர்ச்சிமிகு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அப்பதிவில்,“குழந்தையின் பிறப்பைப் பார்ப்பது ஒரு மனிதனுக்கு மயிர்க்கூச்செறிய வைக்கும், நம்பமுடியாத, ஆச்சரிய அனுபவமாகும். அதனைப் பார்த்த பிறகு, பெண்களின் உண்மையான வலிமையையும் , கடவுள் அவர்களுக்குள் ஏன் உயிரைப் படைத்தார் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

பெண்கள் ஆண்களாகிய நம்மைவிட வலிமையானவர்கள். என் வாழ்க்கையின் மிகவும் சக்திமிக்க, இரக்கமுள்ள, வலிமையான பெண்ணுக்கும், தனது தாயைப் போல வளரப்போகிறவளுக்கும், உலகின் அனைத்து அற்புதமான பெண்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார்.

விராட் கோலியின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: SL vs WI: தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!

ABOUT THE AUTHOR

...view details