இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று டிரினாட்டில் நடைபெற்றது. இதில், இந்திய அணி டக்வொர்த் லூவிஸ் முறையில் 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில், சிறப்பாக பேட்டிங் செய்த இந்திய அணியின் கேப்டன் கோலி, ஒருநாள் போட்டியில் தனது 42ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்து முதலிடத்தில் இருக்கும் இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கரை (49) நெருங்கியுள்ளார்.
கோலி அசால்ட்டாக 75 - 80 சதம் அடிப்பார் - வாசிம் ஜாஃபர் கணிப்பு - வாசிம் ஜாஃப்பர்
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 75 முதல் 80 சதம் அடிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாஃபர் கணித்துள்ளார்.
இதில், கோலி 41ஆவது சதத்தில் இருந்து 42 ஆவது சதம் அடைய அவர் 12 இன்னிங்சை எடுத்துக்கொண்டார். ஆனால், சச்சினுக்கு 37 இன்னிங்ஸ் தேவைப்பட்டன. இதனால், கோலி நிச்சயம் அதிக சதம் அடிப்பார் என பல்வேறு வீரர்கள் கருத்தை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், கோலியின் ஃபார்ம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் ட்வீட் செய்துள்ளார்.
"கோலி 11 இன்னிங்ஸுக்குப் பிறகு கோலி தற்போதுதான் சதம் அடிக்கும் தனது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். என் கணிப்பு படி ஒருநாள் போட்டியில் அவர், நிச்சயம் 75 - 80 சதம் அடிப்பார்" என பதிவிட்டிருந்தார். இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வாசிம் ஜாஃபர் இரண்டு இரட்டை சதம், ஐந்து சதம் என மொத்தம் 1, 944 ரன்களை எடுத்துள்ளார்.