பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக புதிய தசாப்தத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட கோலோ இன்று வெளியிட்டுள்ளது. இது ஆர்சிபி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனிடையே புதிய லோகோ குறித்த ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி விளக்களித்துள்ளார். அதில், '' புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள லோகோவுடன் களமிறங்குவதற்கு ஆவலாக இருக்கிறோம். இந்த லோகோ நமது வீரர்களின் சவால் நிறைந்த ஆட்டத்தை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரை எதிர்நோக்கியுள்ளேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.