ஐசிசியின் கடந்த பத்தாண்டுகளில் சிறந்து விளங்கிய வீரருக்கான விருது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த விருதும் கோலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரத்துக்கும் மேல் ரன்களை கோலி குவித்துள்ளார். இதில் 39 சதங்கள், 48 அரை சதங்கள் அடங்கும். வீரராக களத்தில் இருந்து 112 கேட்ச்சுகளை கோலி பிடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் சராசரியாக 61.89 வைத்திருக்கிறார்.
ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து பேசிய விராட் கோலி, எனக்கு இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. நாட்டிற்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருக்கிறது.
என்னுடைய கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது. இந்த விருதை பெறுவது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.