17ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில்,வாக்காளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் தான் வாக்களிக்க தயாராக உள்ளேன், நீங்கள் என ஜனநாயகக் கடமை குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் அவர் தனது வாக்காளர் அடையாள அட்டை புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
விராட் கோலியின் அடையாள அட்டை இதுவரை 300 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றுள்ளது. 71 மக்களவைத் தொகுதிகளுக்கான நான்காம் கட்ட தேர்தல் நாளையும், 51 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மே 6ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இதைத்தொடர்ந்து, ஹரியானா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் 59 மக்களவைத் தொகுதிகளுக்கான ஆறாம் கட்ட தேர்தல் மே 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், குருகிராம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் விராட் கோலி தனது வாக்கினை பதிவு செய்ய உள்ளார்.